தி.மு.க., ஆட்சியில் வருவாய் ரூ.1.77 லட்சம் கோடியாக உயர்ந்தது
நலிவடைந்து கிடந்த மின்சார துறையை மேம்படுத்த, பல முன்னெடுப்புகளை தி.மு.க., அரசு எடுத்தது. தி.மு.க., ஆட்சியில் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் மின் தேவை தொடர்ந்து அதிகரித்தபோதும், தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டது. அப்படி சீரான மின் வினியோகத்திற்கு வித்திட்டவர் ஸ்டாலின். கடந்த ஐந்து ஆண்டுகளில் மின் துறை வருவாய், 1.77 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியை ஒப்பிடுகையில், தி.மு.க., ஆட்சியில் மின் வாரியத்தின் இழப்பு, 43,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.
கடந்த 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வரும்போதே, மின் வாரியத்தில் 1.59 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. அ.தி.மு.க., ஆட்சியில் வாங்கிய கடனுக்கு, தி.மு.க., அரசு வட்டி கட்டியது. மின் துறையில் அ.தி.மு.க., வாங்கிய கடனுக்காக, தி.மு.க., ஆட்சியில் 75,000 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கையில், அதை ஏன் குறிப்பிடவில்லை?
-செந்தில் பாலாஜி,
முன்னாள் அமைச்சர்
தி.மு.க.,