அக்கா, தம்பி படுகொலை சொத்து தகராறு காரணமா?

தர்மபுரி: தர்மபுரி அருகே, அக்கா, தம்பியை கழுத்தறுத்து கொலை செய்தவர்களை, போலீசார் தேடுகின்றனர். தர்மபுரி, தகடூரை சேர்ந்தவர் மாதேஷ், 35. இவரது மனைவி கீதா. தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். மாதேஷுடன் பிறந்த சகோதரிகள் நாகம்மாள், 49, நஞ்சம்மாள், 47.

கணவரை பிரிந்து நஞ்சம்மாள், மாதேஷ் வீட்டின் அருகே வீடு கட்டி வசித்தார். அவருக்கு, மாதேஷ் நிலம் எழுதி வைத்ததாக தெரிகிறது. இதில், மாதேஷிடம், கீதா, நாகம்மாள் ஆகியோர், அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நஞ்சம்மாள் வீட்டு வாசலில், நேற்று மதியம், 1:00 மணிக்கு, மாதேஷ், நஞ்சம்மாள் இருவரும் கழுத்தறுக்கப்பட்டு, ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தனர்.

அதியமான்கோட்டை போலீசார், இருவரும் சொத்து பிரச்னையில் கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, விசாரிக்கின்றனர்.

Advertisement