செந்தில் பாலாஜி சகோதரருக்கு முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட்

மதுரை: வருமானவரித் துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத் ததாக பதிவான வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமின் அனுமதித்தது.

கரூரில் 2023 மே 26ல் தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, தி.மு.க.,வினர் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர்.

இவ்வழக்கில், செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார், 'ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசியல் உள்நோக்கில் என் பெயரை வழக்கில் தாமதமாக, த வறாக சேர்த்துள்ளனர். முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி பி.தனபால் விசாரித்தார்.

அரசு வழக்கறிஞர், '3 ஆண்டுகளாக அரசியல் காரணங்களால் கிடப்பில் போடப்பட்ட வழக்கை, தற்போது போலீசார் விசாரணைக்கு எடுத்துள்ளனர். 15 பேர் மீது வழக்கு பதிந்ததில், 7 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.

'கரூர் மேயர், 'மனுதாரர் கூறியதால் தாக்குதலில் ஈடுபட்டோம்' என, வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். விசாரணையில் ஒட்டுமொத்த சம்பவத்துக்கும் மனுதாரர் காரணமாக இருந்துள்ளார். மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் முன்ஜாமின் வழங்கக்கூடாது' என, வாதிட்டார்.

சம்பவ இடத்தில் மனுதாரர் இருந்தாரா என, கேள்வி எழுப்பிய நீதிபதி, 'முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மனுதாரர் நான்கு சனிக்கிழமைகளில் போலீசில் ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டார்.

Advertisement