நெய்மர் 981 நாள்
மயாமி: சர்வதேச கால்பந்து அரங்கில் 981 நாளுக்கு பின் நேற்று பிரேசில் அணிக்காக களமிறங்கினார்.
பிரேசில் கால்பந்து அணி கேப்டனாக இருந்தவர் நெய்மர் 34. பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களில் முதலிடத்தில் (129 போட்டி, 79 கோல்) உள்ளார். கடைசியாக 2023, அக்., 17ல் நடந்த உருகுவே அணிக்கு எதிரான உலக கோப்பை தகுதிச் சுற்றில் பங்கேற்றார். அதன் பின் இடது முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட இவர், 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார்.
மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு நிகராக போற்றப்பட்ட இவர் தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டார். நெய்மரை 'ஒர்க் பிரம் ஹோம்' கால்பந்து வீரர் என பிரேசில் அதிபர் லுாயிஸ் கேலி செய்தார்.
ஒருவழியாக ஸ்காட்லாந்து போட்டியில் களமிறங்கினார் நெய்மர். இதன் மூலம் 981 நாட்களுக்கு பின், மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து பிரேசில் அணிக்கு திரும்பினார் நெய்மர். மைதானத்தில் பிரேசில் ஜாம்பவான் ரொனால்டினோ, நெய்மரை கட்டி அணைத்து பாராட்டிய தருணம் உணர்ச்சிகரமானதாக இருந்தது.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின், சர்வதேச போட்டியில் விளையாடிய நெய்மர் போட்டி முடிந்ததும் வெளியிட்ட செய்தியில், 'என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான, உணர்ச்சிகரமான நாட்களில் இதுவும் ஒன்று. மீண்டும் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்தது மகிழ்ச்சி. உடல்ரீதியாக நலமாக உள்ளேன். 'டிரஸ்சிங் ரூமில்' அழுதேன். நாட்டுக்காக விளையாட வாய்ப்பு அளித்த கடவுளுக்கு நன்றி. இந்த உலக கோப்பை தொடரில் வினிசியஸ் தான் எங்களது நட்சத்திர வீரர். போட்டியின் முடிவை தீர்மானிக்கிறார்,' என, தெரிவித்தார்.
பீலே வழியில்
ஜாம்பவான் பீலே (1958, 62, 66, 70), சான்டோஸ் (1954 ,58, 62, 66), கபு (1994, 98, 2002, 2006) வரிசையில், நான்கு உலக கோப்பையில் பங்கேற்ற நான்காவது பிரேசில் வீரரானார் நெய்மர் (2014, 18, 22, 26).
* பீலேவுக்கு பிறகு நான்கு தொடரிலும் 10ம் நம்பர் ஜெர்சி அணிந்த இரண்டாவது வீரரானார் நெய்மர் (14 போட்டி, 8 கோல்).
துரத்திய காயங்கள்...
உலக கோப்பை தொடருக்கும் நெய்மருக்கும் பொருத்தம் கிடையாது போல.
* 2014ல் முழங்கால் காயத்தால் வெளியேறினார்.
* 2018 தொடருக்கு 3 மாதத்திற்கு முன், பாரிஸ் ஜெர்மைன் அணிக்காக விளையாடிய போது, வலது கால் சுண்டு விரல் எலும்பு முறிந்தது. இதனால் முழு உடற்தகுதியுடன் விளையாடவில்லை.
* 2022ல் செர்பியாவுக்கு எதிரான முதல் போட்டியில் வலது கணுக்கால் காயத்தால் அடுத்த இரு போட்டியில் பங்கேற்கவில்லை.
* 2023ல் ஏற்பட்ட காயத்தால், 2026 தொடரில் முதல் இரு போட்டியில் விளையாடவில்லை.
மேலும்
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம்: முதல்வர் விஜய் உறுதி
-
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு; 4300 பேர் காயம்
-
தங்கம் சவரனுக்கு ரூ.640, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சம்பவம்; 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்கிறது கனடா
-
போதை ஒழிப்பதில் சிறப்பான பணி; போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு முதல்வர் பதக்கம்
-
நாங்கள் துவம்சம் செய்துவிட்டோம்; ஈரான் உடன் பேச்சுவார்தையில் சாதகமான நிலை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்