கான்வே, லதாம் சதம்: நியூசிலாந்து அணி அபாரம்

நாட்டிங்காம்: இங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்ற, நியூசிலாந்து அணியின் டாம் லதாம், கான்வே சதம் விளாசினர்.

இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நேற்று, மூன்றாவது டெஸ்ட் நாட்டிங்காமில் துவங்கியது. நியூசிலாந்து 'லெவன்' அணியில் காயம் காரணமாக மாட் ஹென்றி, பிலிப்ஸ் விலகினர்.

'டாஸ்' வென்று முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லதாம், கான்வே ஜோடி நல்ல துவக்கம் தந்தது. லதாம் (151), டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அசத்திய கான்வே (157), பஷிர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, தனது 8வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 361/4 ரன் எடுத்திருந்தது.

Advertisement