அறிமுக வாய்ப்பு... வைபவ் எதிர்பார்ப்பு
பெல்பாஸ்ட்: இந்திய 'லெவன்' அணியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, பெல்பாஸ்ட் நகரில் நடக்கவுள்ளது.
வாய்ப்பு எப்படி: இப்போட்டிக்கான இந்திய 'லெவன்' அணியில் 'இளம் புயல்' வைபவ் சூர்யவன்ஷி 15, அறிமுகமாவது சந்தேகம். ஏனெனில் 'டாப்-ஆர்டரில்' சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான் உள்ளனர். ஒருவேளை வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்க விரும்பினால் சஞ்சு சாம்சன் அல்லது அபிஷேக் சர்மா நீக்கப்படலாம்.
ஏற்கனவே 4, 5வது இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாடி இருப்பதால் அபிஷேக் நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் 4, 5வது இடத்தில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், துணை கேப்டன் திலக் வர்மா களமிறங்குவர் என்பதால், சாம்சனுக்கு 6வது இடம் கிடைக்கலாம்.
'ஆல்-ரவுண்டருக்கான' இடத்துக்கு ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், புதுமுக வீரர் சூர்யான்ஷ் ஷெட்ஜ் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.
பும்ரா, சிராஜ், வருண் சக்ரவர்த்தி இல்லாத நிலையில் இந்திய அணி 5 பவுலர்களுடன் களமிறங்கலாம். 'வேகத்தில்' ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ் இடம் பெறலாம்.
சொந்த மண்ணில், லார்கன் டக்கர் தலைமையில் களமிறங்கும் அயர்லாந்து அணியில் ஜார்ஜ் டாக்ரெல், கரேத் டெலானி, ஹாரி டெக்டர் போன்ற 'டி-20' போட்டியில் விளையாடிய அனுபவ வீரர்கள் கைகொடுக்கலாம். காயம் காரணமாக ஜோஷ் லிட்டில், மார்க் அடைர், பால் ஸ்டிர்லிங், கர்டிஸ் கேம்பர் விளையாடாதது பின்னடைவு.
இதுவரை
சர்வதேச 'டி-20' அரங்கில் அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய 8 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.
இளம் வீரர்
பிரிமியர் தொடரில் (2026) ராஜஸ்தான் அணி சார்பில் 776 ரன் குவித்த வைபவ் சூர்யவன்ஷி, சமீபத்தில் முடிந்த இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலில் இந்தியா 'ஏ' அணிக்காக 11 பந்தில், 50 ரன் விளாசினார். இதன்மூலம் 'லிஸ்ட் ஏ' போட்டியில் அதிவேக அரைசதம் விளாசிய வீரரானார் வைபவ்.
இவருக்கு இன்று 'லெவன்' அணியில் இடம் கிடைக்கும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் இந்திய வீரர் (15 வயது) என்ற சாதனை படைக்கலாம். இதற்கு முன், 1989ல் இந்திய ஜாம்பவான் சச்சின், தனது 16 வயது, 205 நாளில் (எதிர்: பாக்., கராச்சி டெஸ்ட்) அறிமுகமானார்.
மேலும்
-
3 மாதங்களாக ஊதியம் இல்லை சமையல் உதவியாளர்கள் தவிப்பு
-
தி.மு.க., ஆட்சியில் வருவாய் ரூ.1.77 லட்சம் கோடியாக உயர்ந்தது
-
மதுரை பி.ஆர்.பி., கிரானைட் முறைகேடு 3 மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவு
-
செந்தில் பாலாஜி சகோதரருக்கு முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட்
-
அக்கா, தம்பி படுகொலை சொத்து தகராறு காரணமா?
-
வீட்டுக்குள் சிறுத்தையை சிறை பிடித்த கில்லாடி நபர்