போதைப்பொருள் ஒழிப்பு இன்று 5 கி.மீ., மாரத்தான்

சேலம்; தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 'ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்' எனும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம், சேலம் காந்தி மைதானத்தில், இன்று காலை, 6:30 மணிக்கு நடக்கிறது.

5 கி.மீ., மாரத்தானில், 14 வய-துக்கு மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அரசு அதி-காரிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரண இயக்-கத்தினர் உள்ளிட்ட மக்கள் என, அனைவரும் பங்-கேற்கலாம்.விருப்பம் உள்ளவர்கள், காலை, 6:00 மணிக்குள் ஆதார் நகலுடன், காந்தி மைதானத்துக்கு வந்து பதிவு செய்து நேரடியாக பங்கேற்கலாம். முதலில் வரும், 500 பேருக்கு, டி - சர்ட் வழங்கப்படும். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்மணி தெரிவித்துள்ளார்.

Advertisement