தண்ணீர் தொட்டியில் விழுந்த வடமாநில தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி; உத்தரப்பிரதேச மாநிலம், நிர்கபூரை சேர்ந்தவர் சுனில்குமார் 38. போச்சம்பள்ளி சிப்காட்டில் தங்கி, அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

நிறு-வனத்தின் அருகே ஷெட்டில் தங்கியுள்ளார். அவ-ருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த, 22ம் தேதி இரவு, ஷெட்டில் இருந்து தண்ணீர் தொட்டி பக்கம் சென்றவர், தொட்டியில் தண்ணீர் உள்ளதா என பார்த்துள்ளார். அப்போது, தவறி விழுந்து, நீரில் மூழ்கி பலியானார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement