எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாணவருக்கு காய்ச்சல் பாதிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திடீர் வானிலை மாற்றம், குளிர்ந்த சீதோஷ்ணம் மற்றும் துாறல் காரணமாகக் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகளுடன் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சற்று கவனமுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது தட்பவெப்ப நிலை மாறி மாறி பதிவாவதால் காய்ச்சல் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள மாணவர்களுக்குக் காய்ச்சல் பாதிப்பு எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளதால் பெற்றோர் அவர்களின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும்.

மாணவர்களுக்குத் தொடர் காய்ச்சல் பாதிப்பு இருந்தால், வீட்டில் ஓய்வெடுக்க வைத்து முழுமையாகக் குணமான பின்னரே பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காய்ச்சல் பாதிப்பு 10-க்கும் மேற்பட்டோருக்குத் தொடர்ந்து அதிகரித்தால், அதுகுறித்து உடனடியாகச் சுகாதாரத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

Advertisement