கேள்விகளால் துளைத்தெடுத்த விவசாயிகள்; திக்குமுக்காடிய அதிகாரிகள்
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள் அடுக்கடுக்கான வேளாண் பிரச்னைகள் குறித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிகாரிகளைத் திக்குமுக்காடச் செய்தனர்.
காட்டுப்பன்றி அட்டகாசம்
விவசாயிகள் பேச்சு மற்றும் அதிகாரிகள் அளித்த பதில்கள்:
தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஞானப்பிரகாசம்: ஒவ்வொரு மாதமும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பிரச்னைகளுக்குச் சுலபமாகத் தீர்வு காண முடியும். மேலும், நடப்பு ஆண்டுக்கு பட்டுப்போன தென்னை மரங்களுக்குத் தென்னங்கன்று மற்றும் உரம் மானியம் வழங்க வேண்டும். அணிக்கடவு பகுதியில் காட்டுப்பன்றிகள் பயிர்களைச் சேதப்படுத்தி மனிதர்களையும் தாக்குகின்றன; வனத்துறை உரிய இழப்பீடு வழங்கி, பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
வனத்துறையினர்: 35 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; தகவல் கிடைத்த அரை மணி நேரத்திற்குள் பன்றிகளை அப்புறப்படுத்தத் தயாராக உள்ளோம்.
வேளாண் துறையினர்: பட்டுப்போன மரங்களுக்கான மானியம் அரசாணை மூலம் நிச்சயம் கிடைக்கும்).
எல்நினோ பாதிப்பு இருக்காது
விவசாய அமைப்பு பிரதிநிதி மவுன குருசாமி: தேங்காய் விலை கிலோ 250 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகச் சரிந்துள்ளது. சில பகுதிகளில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலையைக் குறைப்பதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அறிக்கை வெளியிட வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.
கலெக்டர்: எல்நினோ பாதிப்பு பட்டியலில் கோவை, திருப்பூர் இல்லை; இருப்பினும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடன் செலுத்த மாட்டோம்
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் காளிமுத்து: தாராபுரத்தில் பலத்த காற்றால் தென்னந்தோப்பு மின் கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு மின்வெட்டு உண்டாகிறது; அங்கு உறை கம்பிவடம் அமைக்க வேண்டும். கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி முழுமையாக வெளியாகும் என்பதால், விவசாயிகள் யாரும் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த மாட்டோம். பி.ஏ.பி.-ல் பைப்லைன் பாசன திட்டத்தை வரவேற்பதால், நீர் இழப்பு தடுக்கப்பட்டு கடைமடைக்குத் தண்ணீர் கிடைக்கும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலாளர் வீரப்பன்: அமராவதியிலிருந்து குடிநீருக்காகத் திறக்கப்பட்ட தண்ணீரை, நீர்வளத்துறை அதிகாரிகள் மட்டை மில் உரிமையாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, சட்டத்திற்குப் புறம்பாகக் கடந்த ஐந்து நாட்களாகக் கடத்துார் வாய்க்காலில் மட்டும் திறந்து முறைகேடு செய்துள்ளனர். (இப்புகாரின்போது அதிகாரிகள் மவுனம் காத்தனர்).
@block_B@ பி.ஏ.பி. பைப்லைன் பாசனம்; சோலார் மின்சாரம் பயன்பாடு
பல்லடம் பகுதியில் பி.ஏ.பி. திட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பில் பம்பிங் முறையிலான பைப்லைன் பாசனம் அமைக்கப்பட உள்ளதாகக் கலெக்டர் தெரிவித்தார். வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் வேலுசாமி, பல்லடத்திற்குப் பதில் திருமூர்த்தி அணைப் பகுதியில் இத்திட்டத்தைச் செய்தால், மின்சாரமே இல்லாமல் புவியீர்ப்பு விசையிலேயே தண்ணீரை அனுப்ப முடியும் என்றார். இதற்கு, இது மத்திய அரசு திட்டம்; சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் செலவு அதிகரிக்காது என்று கலெக்டர் விளக்கமளித்தார்.block_B
மேலும்
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம்: முதல்வர் விஜய் உறுதி
-
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு; 4300 பேர் காயம்
-
தங்கம் சவரனுக்கு ரூ.640, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சம்பவம்; 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்கிறது கனடா
-
போதை ஒழிப்பதில் சிறப்பான பணி; போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு முதல்வர் பதக்கம்
-
நாங்கள் துவம்சம் செய்துவிட்டோம்; ஈரான் உடன் பேச்சுவார்தையில் சாதகமான நிலை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்