ஜார்க்கண்டில் பயணிகள் வாகனம் - டிரக் மோதிய விபத்தில் 7 பேர் பலி
ராம்கர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணிகள் வாகனம் - டிரக் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
ராம்கர் - பொகாரோ சாலையில் உள்ள லாரி என்ற பகுதியில், நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் பயணிகள் வாகனமும், டிரக்கும் மோதி விபத்துக்குள்ளானது. தாஷா பார்ட்டி என்ற இசைக்குழுவினர் சென்ற அந்த வாகனத்தில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்றொரு நபர் உடனடியாக மீட்கப்பட்டு, ராம்கர் சதர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜ்ரப்பா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மரங்மர்ச்சா பகுதியைச் சேர்ந்தவர்கள் என ராம்கர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கவனம்
இந்த விபத்து நள்ளிரவு 12 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
சாலைகள் குறிப்பாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் சிறப்பாக அமைந்தாலும் பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதிப்பதில்லை என்பதுதான் உண்மை. கனரக வாகனங்கள் விதிகளை மீறி வலப்பக்கம் இயக்குவது, ஒவ்வொரு மாவட்ட எல்லைகளிலும் தடுப்புகளமைத்து நான்கு வழிச்சாலைகளை இரண்டாக குறுகச்செய்வது போன்றவை விபத்துகளுக்கான முக்கிய காரணிகள். சாலைகள் சந்திக்கும் இடங்களில் வேகத்தை குறைக்க தகுந்த முன்னறிவிப்பு பதாகைகள் அமைத்து ரம்ஃபளர் ஸ்டிரிப்ஸ் அமைத்தல் சிறந்தாகும்.மேலும்
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம்: முதல்வர் விஜய் உறுதி
-
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு; 4300 பேர் காயம்
-
தங்கம் சவரனுக்கு ரூ.640, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சம்பவம்; 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்கிறது கனடா
-
போதை ஒழிப்பதில் சிறப்பான பணி; போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு முதல்வர் பதக்கம்
-
நாங்கள் துவம்சம் செய்துவிட்டோம்; ஈரான் உடன் பேச்சுவார்தையில் சாதகமான நிலை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்