ஆடு திருடிய 2 பேர் கைது

மோகனுார்: மோகனுார், மணியங்காளிப்பட்டி புதுக்கால-னியை சேர்ந்தவர் ரவி மனைவி உமா, 45. இவர், ஐந்து ஆடுகளை வளர்த்து வருகிறார்.

கடந்த, 24 இரவு, 9:00 மணிக்கு, வீட்டின் காம்பவுண்டுக்குள் ஆடுகளை அடைத்துவிட்டு துாங்க சென்றார். இரவு, 11:00 மணிக்கு ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு, உமா வந்து பார்த்துள்ளார். அப்போது, 12,000 மதிப்புள்ள ஆடு மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகார்படி, மோகனுார் போலீசார் விசாரித்து வந்தனர். அதில், மோகனுார் காக்காத்தோப்பு ரங்கசாமி மகன் லோகேஸ்வரன், 23, கலைவாணி நகரை சேர்ந்த பாலசுப்ரமணி மகன் கணேஷ், 19, ஆகியோர் ஆட்டை திருடியது தெரியவந்தது. அவர்கள் இரு-வரையும், நேற்று காலை, 10:00 மணிக்கு பிடித்த போலீசார், கைது செய்தனர்

Advertisement