டாஸ்மாக் கடை அருகே வாட்டர் பாட்டில் ஸ்நாக்ஸ் விற்ற 4 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காலி மதுபாட்டில் சேகரிக்கும் உரிமம் பெற்று, வாட்டர் பாட்டில் மற்றும் ஸ்நாக்ஸ் விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, பெருவங்கூர் டாஸ்மாக் கடைக்கு அருகே காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் உரிமம் வைத்துள்ள கணேசன் மகன் மனோகரன், 49; கலியன் மகன் மாயக்கண்ணன், 56; இருவரும் மதுபாட்டில் வாங்குபவர்களுக்கு வாட்டர் பாட்டில் மற்றும் ஸ்நாக்ஸ் விற்பனை செய்தது தெரிந்தது.

மேலும், மதுபிரியர்களை கடைக்கு அருகிலேயே அமர வைத்து மது அருந்த செய்துள்ளனர். அதேபோல், சிறுவங்கூர் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் குமார், 50; மற்றும் பாவாடை, 75; ஆகியோரும் காலி பாட்டில் சேகரிக்கும் உரிமம் பெற்று மதுபிரியர்களுக்கு வாட்டர் பாட்டில் மற்றும் ஸ்நாக்ஸ் விற்பனை செய்துள்ளனர்.

மனோகரன், மாயக்கண்ணன், குமார் மற்றும் பாவாடை ஆகிய 4 பேர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement