. பிரித்து போடாத குப்பையால் துாய்மை பணியாளர்கள் அவதி

ராசிபுரம்,; ராசிபுரம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை-களை, பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள தட்டாங்-குட்டை ஏரியில் திடக்கழிவு மேலாண்மை மூலம் தரம் பிரிக்கின்றனர். இதில் மட்கும் குப்பைகளை உரமாக மாற்றி வருகின்றனர்.

மட்காத குப்பை-களை தரம்பிரித்து பல்வேறு சுழற்சிகளுக்கு உட்-படுத்துகின்றனர். இதனால், நகராட்சி பகுதியில் குப்பைகளை மட்கும், மட்காத குப்பைகளாக தரம்-பிரித்து வழங்க வேண்டும் என, நகராட்சி நிர்-வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால், பொதுமக்கள் தரம் பிரிக்காமல் சாலை-யோரம் கொட்டி விடுகின்றனர். இதனால், அப்பகு-தியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்-ளது.ராசிபுரம் காட்டூர் செல்லும் சாலை முகப்பி-லேயே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதை துப்புரவு ஊழியர்கள் அகற்றுவதிலும் சிரமம் உள்-ளதால், தாமதமாகவே குப்பையை அகற்றுகின்-றனர். தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் இப்பகு-தியில் உள்ளன. இதனால், வாகனங்கள் அடிக்கடி செல்வதால், விரைவில் குப்பைகள் சாலைக்கு வந்து விடுகின்றன. எனவே, பொதுமக்கள் குப்-பைகளை தரம் பிரித்து கொட்ட வேண்டும் எனவும், நகராட்சி ஊழியர்களும் உடனுக்குடன் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement