மது வாங்க சென்ற இடத்தில் தகராறு 2 பேரின் கழுத்தை அறுத்தவருக்கு வலை
ராசிபுரம்; ராசிபுரம் அருகே மது வாங்க சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில், இரண்டு இளைஞர்களின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 31, கிருஷ்ணன், 27. இவர்கள் இரு-வரும், நேற்று மாலை, ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க சென்றனர். பின், 'சைட் டிஷ்' கடையில் நின்று பொருட்களை வாங்கிக்கொண்-டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஷாஜகான், 25, என்ற நபர், விஜயகுமாரை விளையாட்டாக அடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜய-குமார் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இரண்டு இளைஞர்களுக்கும், ஷாஜகானுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறி-யது. அங்கிருந்தவர்கள் சத்தம் போடவே, அவர்கள் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்-றனர்.இருப்பினும் ஆத்திரமடங்காத ஷாஜகான், அந்த இளைஞர்களை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றார். தொடர்ந்து சென்ற ஷாஜகான், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென பாய்ந்து இளை-ஞர்கள் விஜயகுமார் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரது கழுத்தையும் கத்தியால் அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் இளைஞர்கள் அலறியதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, ஷாஜகான் அங்கிருந்து தப்பி ஓடினார்.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் படுகாயம-டைந்த இருவரையும் மீட்டு அவசர சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
மதங்களை கடந்த மனிதநேயம்; ஆர்எஸ்எஸ் நிர்வாகி உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் பெண்
-
டாஸ்மாக் கடை அருகே வாட்டர் பாட்டில் ஸ்நாக்ஸ் விற்ற 4 பேர் மீது வழக்கு
-
மதுபாட்டில் விற்ற இருவர் கைது
-
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் 5ம் தேதி கும்பாபிஷேகம்
-
பெருமாளுக்கு புதிய கவசம் சாத்தி வழிபாடு
-
மூணாறில் பருவ மழை குறைவால் குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு