கூட்டுறவு சங்க பொருட்கள் மொத்த விற்பனையை அதிகரிக்க யோசனை
நாமக்கல்; நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்துவது மற்றும் விற்-பனையை அதிகப்படுத்துவது தொடர்பான ஆய்-வுக்கூட்டம் நடந்தது. இதில் கூட்டுறவு சங்கங்-களின் கூடுதல் பதிவாளர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு பண்டகசாலையை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கூட்டுறவு பொருட்களை சந்தைப்படுத்த, அரசு அலுவலர்களிடம் மளிகை பொருட்களின் தேவைப்பட்டியலை பெற்று அவர்களுக்கு தேவையான பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும். அதற்கான தொகையை இ.சி.எஸ்., மூலம் பண்டகசாலை கணக்கிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமணம் மற்றும் இதர சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான மளிகை பொருட்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும்.அரசு அலுவலகங்கள், மக்கள் கூடும் இடங்-களில் கூட்டுறவு பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும். பண்டகசாலையில் விற்கப்படும் பொருட்களின் விலையை, இதர தனியார் நிறுவ-னங்களின் விலையோடு ஒப்பிட்டு, கூட்டுறவு பொருட்களின் விலை குறைவாக இருப்பதை விளம்பரம் செய்து விற்பனையை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, நாமக்கல் வேளாண்மை உற்பத்தி-யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்குட்-பட்ட முல்லைநகர் ரேஷன் கடையை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடையில் இருந்த கட்டுப்பாடு பொருட்களின் தரத்தை ஆய்வு செய்த அவர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின், ரேஷன் கடை விற்பனையாளரிடம் இ--கே.ஒய்.சி., கைரேகை பதிவு செய்யும் பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தனலட்சுமி, நாமக்கல் சரக துணைப்பதிவாளர் ஜேசுதாஸ், பொது வினியோ-கத்திட்ட துணைப்பதிவாளர் சரவணன், பயிற்சி துணைப்பதிவாளர் சத்யா, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சர-வணன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும்
-
பேக்சியா 11ம் ஆண்டு தொடக்க விழா கொண்-டாட்டம்
-
'கிடா' பலியிட்ட விவகாரத்தில் எஸ்.ஐ., இடமாற்றம்
-
முடி திருத்தும் தொழிலாளருக்கு இலவச வீட்டு மனை கிடைக்குமா?
-
பா.ஜ.,வுடன் நெருக்கம் காட்டும் தி.மு.க., - த.வெ.க., கட்சிகள் ஆகஸ்டில் அணி மாற்றம் நிகழ வாய்ப்பு?
-
மயான பாதை அடைப்பு அமைதி பேச்சுக்கு பரிந்துரை
-
அகில இந்திய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடக்கம்