மானிய விலையில் நிலக்கடலை விதை: வேளாண் துறை தகவல்

குமாரபாளையம்; பள்ளிப்பாளையம் வேளாண்மை உதவி இயக்-குனர் சத்திய பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: தேசிய உணவு எண்ணெய் இயக்கம், 2026-27 திட்-டத்தில், பள்ளிப்பாளையம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தின் கிடங்கில், தேசிய விதை கழகம் உற்பத்தி செய்த, 4,900 கிலோ, 'கிர்னார்-5' ரக சான்று விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.


பள்ளிப்பாளையம் வட்டாரத்தில், காரீப்--26 பரு-வத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள ஆயத்தமாக உள்ள விவசாயிகளுக்கு, விதை நிலக்கடலை, ஹெக்டேருக்கு,- 150 கிலோ விதை மானிய விலையில் வழங்க தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டில் இத்திட்டத்தில் பயன்-பெறாத விவசாயிகள், ஆதார் அட்டை, மொபைல் எண், சிட்டா, வங்கி கணக்கு எண் உடன் வேளாண்மை விரிவாக்க மையம், வெப்படை மற்றும் குமாரபாளையம் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு இடுபொருட்களை பெற்று பயன்பெறலாம்.மேலும், உற்பத்தி அதிகரிக்க விதை நேர்த்தி, உயிர் உரங்கள், நுண்ணுாட்ட கலவை, நுண்ணீர் பாசனம் மூலம் உரம் செலுத்துவது, ஜிப்சம் இடுதல், களை மேலாண்மை முதலிய தொழில்-நுட்பங்கள் செயல்படுத்தி அதிக மகசூல் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பதப்ப-டுத்தும் ஆலைகளுக்கு நேரடியாக வழங்கி அதிக லாபம் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement