ஏரி நீரில் மூழ்கிய சாலையில் புதர் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
ராசிபுரம்; ராசிபுரத்தில் இருந்து காட்டூர் சாலை வழியாக அணைப்பாளையம் புறவழிச்சாலைக்கு செல்ல முக்கிய கிராமத்து சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை அணைப்பாளையம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் அமைந்துள்ளதால், மழைக்காலங்-களில் ஏரியில் தண்ணீர் நிரம்பும்போது சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கிவிடும். ஏரி நீரில் சாலை மூழ்கும்போது, இப்பகுதியில் போக்குவ-ரத்து முற்றிலும் துண்டிக்கப்படும். அந்த சமயங்-களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சந்-திரசேகரபுரம் வழியாகத்தான் சுற்றி செல்வர். கடந்த ஆண்டு பெய்த கனமழையால், 10 மாதங்க-ளுக்கு மேல் இந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்-பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த பாதையில் ஏரித்தண்ணீர் குறைந்ததால் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த கிராமத்து சாலை திறக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையை மீண்டும் பயன்படுத்த தொடங்கினர். ஆனால், ஏரி நீர் நீண்ட நாட்களாக தேங்கி நின்றதால் சாலையின் இரண்டு பக்கமும் கோரை புற்கள் மற்றும் செடிகள், 6 அடி உயரத்-திற்கு புதர்போல அடர்ந்து வளர்ந்துள்ளன.இதனால், சாலை வளைவுகளில் எதிர்பக்கம் வரும் வாகனங்கள் மற்றும் நபர்களை வாகன ஓட்டிகளால் சரியாக தெரிந்து கொள்ள முடிவ-தில்லை. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. அதுமட்-டுமின்றி, புதர்கள் மண்டியுள்ளதால் இரவு நேரங்-களில் சர்வ சாதாரணமாக பாம்புகள் மற்றும் விஷப் பூச்சிகள் சாலையில் உலா வருகின்றன. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பதற்குள் சாலையோரம் வளர்ந்துள்ள கோரை புற்கள் மற்றும் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.
மேலும்
-
பேக்சியா 11ம் ஆண்டு தொடக்க விழா கொண்-டாட்டம்
-
'கிடா' பலியிட்ட விவகாரத்தில் எஸ்.ஐ., இடமாற்றம்
-
முடி திருத்தும் தொழிலாளருக்கு இலவச வீட்டு மனை கிடைக்குமா?
-
பா.ஜ.,வுடன் நெருக்கம் காட்டும் தி.மு.க., - த.வெ.க., கட்சிகள் ஆகஸ்டில் அணி மாற்றம் நிகழ வாய்ப்பு?
-
மயான பாதை அடைப்பு அமைதி பேச்சுக்கு பரிந்துரை
-
அகில இந்திய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடக்கம்