மாரியம்மன், காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா

பாப்பாரப்பட்டி; பாப்பாரப்பட்டி அடுத்த மாக்கனுார் மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவில், ஏராள-மான பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்-தனர்.


தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பாப்-பாரப்பட்டி அருகே மாக்கனுார் கிராமத்தில் பழ-மையான மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. ஆனி மாத கோவில் திருவிழா, இந்த ஆண்டு தொடர்ந்து நான்கு நாட்களாக சிறப்பு பூஜை செய்து, ஊர் எல்லை பகுதியிலிருந்து, 1 கி.மீ., துாரத்திலிருந்து பம்பை மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் சக்தி பூங்கரகம் எடுத்து வந்-தனர். அம்மன் கோவில் முன் அமைக்கப்பட்ட, 20 அடி நீளமுள்ள தீ குண்டத்தில், 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, மின்னொளி அலங்காரத்தில் மாரி-யம்மன், காளியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கிராமத்தில் உள்ள பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர், காளியம்மன் தேரை வடம் பிடித்து பொதுமக்கள் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னதாக விவசாயம், தொழில் வளம் பெற அம்மனுக்கு கூழ் ஊற்றப்பட்டது.

Advertisement