வாகனங்களுக்கு அபராதம் பொதுமக்கள் வலியுறுத்தல்

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூரில் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, மஜீத்தெரு மற்றும் நான்குரோடு, திரு.வி.க., நகர், கச்சேரிமேடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் முன், நான்கு வழிச்சாலையின் இருபுறமும் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்-றன.

இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நடந்து செல்வோர் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, போக்குவரத்-திற்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட வேண்டும்.

Advertisement