கடத்துாரில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு
பாப்பிரெட்டிப்பட்டி; கடத்துாரில் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. சுற்றுச்சூ-ழலை பாதிக்கும், 40 மைக்ரானுக்கும் குறைவான பாலித்தீன் பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை உள்ளது. அதன்படி பேரூராட்சி பகுதிகளில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள், விற்பனை செய்பவர்களுக்கு அப-ராதம் விதிக்கப்படுகிறது.
ஆனால், கடத்துார் பேரூராட்சியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.பல கடைகளில் தடைசெய்யப்பட்ட கேரி பேக், பிளாஸ்டிக் கப் போன்றவற்றின் பயன்பாடு குறையாமல் உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் பேரூராட்சியின் பல பகுதிகளில், பிளாஸ்டிக் குப்பை அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் குப்பையை சிலர் எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசு படுகிறது.
சுற்றுச்சூழலை பாதிக்கும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் வலியு-றுத்தி உள்ளனர்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள், மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கின்றன என்றால், அதனை ஏன் உற்பத்தி செய்ய வேண்டும்? வேரை வெட்டாமல் கிளைகளை வெட்டி என்ன பயன்.மேலும்
-
தண்ணீர் பற்றாக்குறையால் கரும்பு விவசாயிகள் தவிப்பு: வறட்சியால் பாசன கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தது
-
கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்பு
-
நிறைவடையும் தருவாயில் இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!
-
தகவல் சுரங்கம்: சிறுகோள் தினம்
-
அறிவியல் ஆயிரம்: மறைந்து வரும் கடல்
-
தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை