கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு வார விழாவையொட்டி கொடி ஏற்றுதல், மரக்கன்று நடுதல் மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி, மண்டல இணைப் பதிவாளர் முருகேசன் கூட்டுறவு கொடியினை ஏற்றி உறுதிமொழி வாசித்தார். தொடர்ந்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர்கள் ரகு, (பொது வினியோக திட்டம்) சாந்தி, திருக்கோவிலுார் கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குநர் விஜயகுமாரி முன்னிலை வகித்தனர். மேலாண்மை இயக்குநர் ராமச்சந்திரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்கள், துணைப் பதிவாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், சார்பதிவாளர்கள், முதுநிலை ஆய்வாளர்கள், கூட்டுறவு அலுவலர்கள் மற்றும் சங்க செயலாளர்கள் பங்கேற்றனர். மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் செல்வராசு நன்றி கூறினார்.

Advertisement