பரவும் காய்ச்சலை தடுக்க காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்தில் வேகமாக பரவும் காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கால் மக்கள் பாதிப்பு, காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த, சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் சளி, காய்ச்சல் மற்றும் வயிற்றுபோக்கால் பலர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவம-னைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் ஒகேனக்கல் கூட்டு குடிநீரின் மூலம் சளி, காய்ச்சல், வயிற்று போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து, தர்மபுரி மாவட்ட சுகாதாரப்ப-ணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன் கூறிய-தாவது:தர்மபுரி மாவட்டத்தில், காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் ஏற்படாத வண்ணம் துரிதமான நட-வடிக்கைகள் சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்-பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் மற்றும் இம்மாத தொடக்கத்தில் பெய்த தொடர் மழை உள்ளிட்டவற்றால் ஆங்காங்கே ஒரு சிலர் சாதா-ரண காய்ச்சல் பதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், குழந்-தைகள், முதியவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால், உடனடியாக அருகி-லுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது தலைமை மருத்துவமனையில் பரிசோதனை செய்து, சிகிச்சை பெற்று கொள்ள அறிவுறுத்தப்-பட்டுள்ளது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிணறு, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட நீர்ஆதாரங்களை பயன்படுத்-துவோர், குடிநீரை நன்கு காய்ச்சி ஆறவைத்த பின் குடிக்க வேண்டும். பி.டி.ஓ.,க்கள் மூலம் கிராம பஞ்.,களில் தினமும் குடிநீரின் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது ஏற்பட்-டுள்ள காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த குடிநீர் மற்றும் உணவு முறை விஷயத்தில், மக்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
தண்ணீர் பற்றாக்குறையால் கரும்பு விவசாயிகள் தவிப்பு: வறட்சியால் பாசன கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தது
-
கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்பு
-
நிறைவடையும் தருவாயில் இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!
-
தகவல் சுரங்கம்: சிறுகோள் தினம்
-
அறிவியல் ஆயிரம்: மறைந்து வரும் கடல்
-
தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை