வீதியில் கிடந்த வெள்ளி கொலுசு போலீசில் ஒப்படைத்த மாணவர்கள்
பாப்பிரெட்டிப்பட்டி; தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி செம்புவ-ராயன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவ-ரது மகன் ராகவன், 11, முருகன் மகன் பிரனேஷ், 11, இருவரும் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கின்-றனர்.
சந்திர உதயன் மகன் மாயக்கண்ணனன், 12. அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கின்றார். மூவரும் நண்பர்கள்.
இவர்கள் நேற்று விடுமுறை தினம் என்பதால், ஜீவா நகர் அரசு பள்ளி வளாகத்தில் விளையாட சென்றனர். அப்போது பள்ளி வளாக பகுதியில், வெள்ளி கால் கொலுசு, ஒன்று கீழே கிடந்துள்ளது. இதை பார்த்த மூவரும், அக்கொலுசை எடுத்துச்-சென்று பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்-தனர்.நேர்மையாக நடந்த மாயகண்ணன், ராகவன், பிரனேஷ் ஆகிய மாணவர்கள் மூவரையும், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.