லிப்ட் கேட்டு செயின் பறிப்பு

திருப்புவனம்:திருப்புவனத்தில் டூவீலரில் லிப்ட் கேட்டு தங்கச் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் சக்குடியை சேர்ந்தவர் லட்சுமணன் 29, தி.பழையூரில் வழியாக டூவீலரில் செல்லும் போது வழியில் லிப்ட் கேட்டு ஏறியவர் லட்மணன் கழுத்தில் இருந்த இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பறித்து தப்பினார். பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் சிலைமானைச் சேர்ந்த அய்யனார் 35, என்றும் இவர் மீது ஏற்கனவே வழக்குகள் இருந்ததும் தெரியவந்தது. திருப்புவனம் போலீசார் அய்யனாரை ரிமாண்டிற்கு அனுப்பினர்.

Advertisement