வால்பாறை அரசு கல்லுாரியில் விடுதி கட்டும் பணி துவக்கம்

வால்பாறை: வால்பாறை அரசு கல்லுாரியில் விடுதி கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 978 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் பெரும்பலான மாணவர்கள் வெளியூர்களை சேர்ந்தவர்கள். கல்லுாரியில் விடுதி வசதி இல்லாததால், ஆண்டு தோறும் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ததால், மாணவர்கள் தங்கி படிக்க வசதியாக விடுதி கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கல்லுாரியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவர்கள் தங்கி படிக்க வசிதியாக கல்லுாரி வளாகத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி கட்டும் பணி நடக்கிறது. இதே போல், ஆதிதிராவிட நலத்துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனி விடுதி கட்டும் பணியும் நடக்கிறது.

இந்த இரு விடுதிகளும் கல்லுாரி வளாகத்திலேயே கட்டப்படுகிறது. முன்னதாக மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க, மண் தடுப்புச்சுவர் கட்டும் பணி தற்போது நடக்கிறது. அடுத்த  ஆண்டு இறுதிக்குள் இரு விடுதிகளும் கட்டி முடிக்கப்படும்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement