குறுகிய ரோட்டில் மின்கம்பத்தால் ஆபத்து: மாற்றியமைக்க வலியுறுத்தல்

நெகமம்: நெகமம், குருநல்லிபாளையம் செல்லும் பிரதான ரோட்டின் ஓரத்தில், மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரே ஊராட்சி போர்வெல் உள்ளதால், ரோடு குறுகலாக உள்ளது.

இதனால், வாகனங்கள் இப்பகுதியை கடக்கும் போது சிரமமாக உள்ளது. எதிரே வாகனங்கள் வந்தால் வழி விட முடியாத நிலை உள்ளதால், ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். சிறிது கவனம் சிதறினாலும், விபத்து ஏற்படுகிறது.

எனவே, மின்கம்பத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் கூறியதாவது:

மின்கம்பத்தை மாற்றி அமைக்க கோரி, மூன்று ஆண்டுகளுக்கு முன் வலியுறுத்தப்பட்டது. அதன்பின், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மின் கம்பத்தை மாற்றியமைப்பதாக கூறினர். அதன்பின் எந்த நடவடிக்கையும் இல்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் இவ்வழியாக வந்த டிப்பர் லாரி, மின் கம்பத்தில் உள்ள மீட்டர் பெட்டி மீது மோதியதுது.

மின்கம்பத்தின் எதிரே போர்வெல் அமைந்துள்ளதால், இரவு நேரத்தில் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள், போர்வெல் இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகின்றன. இதனால், போர்வெல் அருகில் கற்களை அடுக்கி வைத்துள்ளோம். மேலும், மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து சேதமடைந்துள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் குடியிருப்புகள் மீது, மின்கம்பம் விழும் வாய்ப்புள்ளது. எனவே, மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement