தேசிய நெடுஞ்சாலையில் பூத்து குலுங்கும் மலர்கள்



தர்மபுரி; தர்மபுரியிலிருந்து, ஓசூர் செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலை கடந்தாண்டு, 80 சதவீதத்திற்கும் மேல் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் பொது போக்குவரத்திற்கு சாலை திறக்கப்பட்டது. தற்-போது, ஒருசில இடங்களில் மட்டும் பணிகள் நடந்து வருகிறது.


இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை நடுவே, தர்மபுரி அடுத்துள்ள சோகத்துார், கடகத்துார், அல்லியூர், புலிக்கரை, சோமனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில், சாலை பராமரிப்பு குழுவின் சார்பில், அலங்கார பூச்செடிகள், மருதாணி, அரளி போன்-றவை நட்டு வளர்க்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர் மழையால், இச்செடிகள் அனைத்தும் தற்போது, பூத்து குலுங்கி வருகிறது. இவை, வாகன ஓட்டிகளின் கண்களை கவர்ந்து வருகிறது.

Advertisement