போதை இல்லாத கோவை விழிப்புணர்வு பேரணி

கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பின்(சி.ஐ.ஐ.,) ஓர் அங்கமான யங் இந்தியன்ஸ் கோவை கிளை சார்பில் ‘நமக்கு வேண்டாம்’ என்ற தலைப்பில், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்தது.

பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் ‘ஆரோக்கியமான இந்தியா’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். மீடியா டவர் அருகே பேரணி முடிவடைந்தது.

சிங்காநல்லுார் எம்.எல்.ஏ., ஸ்ரீ கிரிபிரசாத் பேரணியை துவக்கி வைத்து பேசுகையில், ‘‘தெரிந்துகொள்ளும் ஆர்வம், நண்பர்கள் வற்புறுத்தல் காரணமாக பலர் போதைக்கு அடிமையாகின்றனர். இது நம்மை மட்டுமின்றி நம் குடும்பத்தையும், சமூகத்தையும் அழிக்கிறது. எதிர்காலத்தின் குரலாக இருக்கும் மாணவர்கள் போதை பழக்கத்துக்கு ஆளாகாமல் வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டும்,’’ என்றார்.

போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை(வடக்கு), யங் இந்தியன்ஸ் கோவை கிளை தலைவர் ராகுல் காமத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement