விளையாட்டு// தேசிய தடகளம்: 26 பதக்கங்கள் குவித்து தமிழக அணி முதலிடம்
சென்னை: ஒடிஷாவில் நடந்த தேசிய தடகள போட்டியில், 9 தங்க ம் உட்பட 26 பதக்கங்களுடன் , தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்திய தடகள சங்கம் சார்பில், இருபாலருக்குமான 65வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடந்தது.
இதில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனையர் போட்டியிட்டனர்.
இப்போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து வீரர் – வீராங்கனையரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடந்த மாதம் நடந்த தேசிய சீனியர் போட்டியை ஒப்பிடுகையில், இம்முறை தமிழகத்திற்கு கூடுதலாக தங்கம் கிடைத்துள்ளது.
தமிழக அணி 9 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என, மொத்தம் 26 பதக்கங்கள் கைப்பற்றி, 109 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இரண்டாவது இடத்தில், ஹரியானா அணி 96 புள்ளிகளும், உத்தர பிரதேசம் அணி 81 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
மேலும்
-
பிரேசில் 'திரில்' வெற்றி: ஜப்பான் அணி ஏமாற்றம்
-
மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட குழு: அரசு உத்தரவு
-
ஹிந்து எதிர்ப்பு அரசியலை கைவிடலாமா? திமுக தலைமை திடீர் ஆலோசனை
-
ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள் பாரபட்சமின்றி நடக்க முதல்வர் விஜய் உத்தரவு
-
'முதலில் அடிப்படை வசதி; பின், கட்டண உயர்வு'
-
போதை இளைஞர் கைது