மின் திருட்டு; ரூ.39 லட்சம் அபராதம்

கோவை: கோவை மின்வாரிய அமலாக்கப்பிரிவினர் நடத்திய பல்வேறு சோதனைகளில் மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு ரூ.39 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நெகமம் பூரண்டாம்பாளையத்தில் நடந்த ஆய்வில், ஒரு நிறுவனம் மின் திருட்டில் ஈடுபட்டது ரூ.5.33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. குற்றவியல் நடவடிக்கையைத் தவிர்க்க ரூ. 28 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

சோமனூர் செலக்கரிச்சல் பகுதியில் நடந்த சோதனையில், மின் திருட்டு கண்டறியப்பட்டு ரூ. 5.94 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சமரசத் தொகையாக ரூ.32 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

கோவை தெற்கு, உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் கோவை மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த 6, 12ம் தேதிகளில் நடத்திய சோதனையில் 13 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டன.

சம்பந்தப்பட்ட மின் நுகர்வோருக்கு ரூ.17.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.  விதிமீறல் வழக்குகளுக்காக ரூ.9.43 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சமரசத் தொகையாக ரூ.85 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

மின் திருட்டு, விதிமீறல் தொடர்பான புகார்களை 94430 49456 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என, மின்வாரிய அமலாக்கப்பிரிவு செயற்பொறியாளர் பூபதி தெரிவித்துள்ளார்.

Advertisement