சென்னை-போடி ரயில் பராமரிப்பு பணியால் தாமதம்

தேனி:சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி, சேலம், கரூர், மதுரை வழியாக போடிக்கும், மறுமார்க்கத்திலும் சனிக்கிழமைகள் தவிர வாரத்தில் 6 நாட்கள் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் ஜூன் 28 சென்னை சென்ட்ரலில் இரவு 10: 30 மணிக்கு அதிவிரைவு ரயில் புறப்பட்டது. அந்த ரயில் போடிக்கு ஜூன் 29 காலை 8:50 மணிக்கு வந்து சேரவேண்டிய நிலையில் 2:30 மணி நேரம் தாமதமாக 11:27 மணிக்கு வந்து சேர்ந்தது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். இதனை வரும் நாட்களில் தாமதம் இன்றி இயக்க பயணிகள் வலியுறுத்தினர்.

இதுபற்றி ரயில்வே அதிகாரி கூறுகையில், 'அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் சிக்னல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் போடி ரயில் தாமதமாக புறப்பட்டு வந்தடைந்தது,' என்றார்.

Advertisement