போக்குவரத்து விதிமுறை மீறல்:  கண்டு கொள்ளாத போலீசார்

வால்பாறை: வால்பாறை நகரில், விதிமுறையை மீறி ரோட்டில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த, போலீசார் தயக்கம் காட்டுவதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

சுற்றுலாபயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்கள் நெடுஞ்சாலைத்துறை நடுரோட்டில் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக காந்திசிலை பஸ் ஸ்டாண்டு, சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புறம், போஸ்ட் ஆபீஸ், ஸ்டேன்மோர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இந்த வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதால், மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

வாகன ஓட்டுனர்கள் கூறியதாவது: வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, வார விமுறை நாட்களில் கூட சுற்றுலாபணியர் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர்.

சுற்றுலா வாகனங்கள் போக்குவரத்துக்கு விதிமுறையை மீறி, நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் தாறுமாறாக ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

விதிமுறை மீறலை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், நகராட்சி சார்பில் அண்ணாதிடலில் நடைபெற்று வரும் கார் பார்க்கிங் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement