உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்; நயினார் நாகேந்திரன்
சென்னை: உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு முடிவில் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தி, வெளியிடப்பட்ட முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
தகுதித் தேர்வு முடிவுகளை முறையாக வெளியிடும் திறன் கூட முதல்வருக்கு இல்லையா? உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வில் இரண்டாம் தாளுக்கான மதிப்பெண் வழங்குவதில் நடைபெற்ற குளறுபடியை நாம் சுட்டிக்காட்டிய நிலையில், தற்போது சிலரது மதிப்பெண்களில் மட்டும் நீலம் மற்றும் மஞ்சள் வண்ணமிட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பல ஆண்டுகள் கழித்து நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி, வண்ண அடையாளக் குறியீடு குளறுபடி எனத் தொடர்ந்து எழுந்து வரும் புகார்கள், தேர்வில் மிகப்பெரும் முறைகேடு நடைபெற்றிருக்கக் கூடுமோ எனும் சந்தேகத்தைக் கிளப்புகிறது.
அதிலும் தங்கள் தலைமையிலான ஆட்சிப் பொறுப்பேற்ற பின் வெளிவந்துள்ள முதல் தகுதித் தேர்வின் முடிவிலேயே அடுக்கடுக்கான புகார்கள் எழுப்பியுள்ளது, தங்களது "தூய சக்தி" அரசின் நிர்வாகத் திறனை சந்தேகம் கொள்ளச் செய்கிறது.
பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் மற்றும் லட்சக்கணக்கான அரசுக் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது, உடனடியாக விசாரணை நடத்தி, வெளியிடப்பட்ட முடிவுகளை மறுபரிசீலனை செய்யுங்கள்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
இன்றைய அறிக்கை விட்டாச்சு. 2031ல் கண்டிப்பாக பாஜக வெளியே வரும்
அப்ப தேர்வு எழுதி தகுதி ஆனவர்கள் எல்லாம் பைத்தியங்களா ? 13 வருட காத்திருப்பின் வலி உமக்கு தெரியுமா பராரி ...கண்ணிமைக்கும் நேரத்தில் குரங்கு போல கட்சிமாறும் உமக்கு தெரியுமா எங்கள் வலி
அதுதான் அண்ணாமலை ஏற்கனவே சொல்லிட்டாரே. நீங்க என்ன எக்கோவா? 18 சதவீத வோட்டு வங்கியை 3 சதவீதத்துக்கு கொண்டு வந்து விட்டு பதவி விலகாமல் இன்னும் லவுசு விட்டு கொண்டிருக்கீங்க. ராஜினாமா செய்து விட்டு போங்க.
இவர பார்த்தாலே எரிச்சல் வருகிறது.மேலும்
-
கிரஷர் இயந்திரத்தில் புடவை சிக்கி பெண் பலி
-
ஏர்போர்ட்டில் ரூ.56 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
-
கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் 1.62 லட்சம் கால்நடைகளுக்கு இலக்கு
-
திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத தெருக்கூத்து
-
பைக்கிலிருந்து தவறி விழுந்த தனியார் ஊழியர் உயிரிழப்பு
-
அமெரிக்காவில் வெள்ளத்தில் மூழ்கிய கார்; வம்சாவளி இந்தியர் பலி