அரசுப்பள்ளியில் பெற்றோர் கூட்டம்
பொள்ளாச்சி: தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பெற்றோர் கூட்டம் நடந்தது.
பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மாரியம்மாள் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அய்யம்மாள் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் கணேசன் வரவேற்றார்.
இந்தாண்டு ஒன்றாம் வகுப்பு முதல், 3ம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாட்டத்திட்டம் குறித்து விளக்கப்பட்டது.
இந்தாண்டு ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தியுள்ள வாழ்வியல் திறன் மற்றும் விழுமியக்கல்வி வாயிலாக மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வி போதிப்பதை பற்றியும் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர்கள் தேவி, மணிவேல், மகாலட்சுமி, உஷா, சித்ராகலா ஆகியோர் தங்களது வகுப்பு மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலையினை தெரிவித்து மாணவர்கள் மேலும் முன்னேற்றம் அடையும் வகையில் பெற்றோர் ஓத்துழைப்பு வழங்க கேட்டுக்கொண்டனர்.
பள்ளிக்கு அருகில் ஊர் மத்தியில் உள்ள குப்பை குழியினை மண்போட்டு நிரப்பி சமதளப்படுத்தி மாணவர்கள் விளையாட்டு இடமாக மாற்ற வேண்டும். தமிழக முதல்வர் காலை உணவுத்திட்டத்துக்காக தனி சமையலறை கட்டப்பட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.