திறந்தும் பயன்பாடில்லாத நகராட்சி சந்தை கட்டடம்
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் ரூ.பல கோடி நிதியில் கட்டி திறந்தும் சந்தை கட்டடம் பயன்பாடு இன்றி உள்ளது.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மயான ரோட்டில், நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ், 7.57 கோடி நிதியில், தினசரி சந்தை கட்டடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு, கட்டும் பணி துவங்கியது. பணிகள் முடிந்து 3 மாதங்களுக்கு முன்பு, கட்டடம் திறப்பு விழா செய்யப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட கடைகள், சரக்கு லாரிகள் நிற்க வசதியான இடம், பொது கழிப்பறைகள், பொருள் காப்பகம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையின் சர்வீஸ் ரோடு அருகில் அமைந்துள்ளதால், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து பொருட்களை விரைவாக கொண்டு வந்து செல்ல கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கட்டடம் செயல்பட நகராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்படாததால், திறப்பு விழா கண்டு 3 மாதங்கள் ஆகியும் காட்சி பொருளாக உள்ளது.சந்தை கட்டடம் செயல்பட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
தண்ணீர் பற்றாக்குறையால் கரும்பு விவசாயிகள் தவிப்பு: வறட்சியால் பாசன கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தது
-
கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்பு
-
நிறைவடையும் தருவாயில் இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!
-
தகவல் சுரங்கம்: சிறுகோள் தினம்
-
அறிவியல் ஆயிரம்: மறைந்து வரும் கடல்
-
தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை