மொபட் திருட்டு
குள்ளஞ்சாவடி;மொபட் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த வடக்கு பள்ளி நீரோடை பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி. இவர் சில தினங்களுக்கு முன் தனக்கு சொந்தமான மொபட்டில் மீன் பிடிக்க நீராழி சுடுகாடு அருகில் சென்றார். அங்கு வாகனத்தை நிறுத்தி மீன் பிடிக்க சென்று மீண்டும் திரும்பினார். அப்போது மொபட் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement