ஏர்போர்ட்டில் ரூ.56 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில், 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய்க்கு, இரு நாட்களுக்கு முன் காலை 9:30 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது.
இதில் பயணம் செய்ய, தமிழகத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் வரிசையில் காத்திருந்தார். அவரது உடைமைகள் சந்தேகிக்கும்படி இருந்தன. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சோதனை செய்ததில், கணக்கில் வராத வெளிநாட்டு கரன்சி கட்டுக்கட்டாக இருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு 56 லட்சம் ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அணுக்கனிம சுரங்க விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு ஏன்; முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி
-
தினமும் ஒரு திருக்குறள் மனப்பாடம் மாணவர்களுக்கு ஏ.எஸ்.பி., அறிவுரை
-
ரூ 4.10 கோடியில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டடம் திறப்பு
-
(பட்டம் வாங்கும் கல்லுாரி) கல்லுாரியில் தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி
-
திறன் மேம்பாட்டு பயிற்சி
-
பயனற்ற ரேஷன் கடையை அகற்றுங்க
Advertisement
Advertisement