அணுக்கனிம சுரங்க விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு ஏன்; முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி
சென்னை: கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்க விவகாரத்தில் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு ஏன்? என்பதை முதல்வர் விஜய் விளக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தவெக பொய்க்கால் குதிரை அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதே திட்டத்தை, கடந்த 2024ம் ஆண்டு நவ.3ம் நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
அந்த தீர்மானத்தில் இத்திட்டத்தை தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ள இன்றைய ஆளுங்கட்சி, இதனை அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சுத் திட்டம் என்று கூறி இதனை கைவிட வலியுறுத்தி உள்ளது.
நச்சுத் திட்டம் என்று இன்றைய ஆளுங்கட்சி சொன்ன திட்டத்தை இப்போது செயல்படுத்த முனைவது குறித்த காரணத்தை இன்றைய முதல்வர் விளக்க வேண்டும்; உள்ளபடியே அது நச்சுத் திட்டம் தான் என்றால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு இபிஎஸ் கூறி உள்ளார்.
மஹாபலிபுரம் இணைப்பு விழாவுக்கு போறீங்களா சார்? சாப்பாடு போடுவாங்க போங்கமேலும்
-
இந்திய அணிக்கு வெண்கலம் * ஆசிய யூத் டேபிள் டென்னிசில்
-
காலிறுதியில் இந்திய ஜோடி * யு.எஸ்., ஸ்மாஷ் டேபிள் டென்னிசில்
-
சர்வதேச இந்திய கைப்பந்து போட்டிக்கு விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
-
அன்னாபிஷேகம்
-
உவ்வே... கழிப்பறைகளுக்கு அபராதம்: கமிஷனர் உத்தரவு
-
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம்