தினமும் ஒரு திருக்குறள் மனப்பாடம்: மாணவர்களுக்கு ஏ.எஸ்.பி., அறிவுரை

காரைக்குடி:அழகப்பா அரசு கலைக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவ, மாணவியர் அறிமுக பயிற்சி துவக்க விழா நடந்தது. முதல்வர் வசந்தி தலைமையேற்றார். வரலாற்று துறை தலைவர் நிலோபர் பேகம் வரவேற்றார்.

காரைக்குடி ஏ.எஸ்.பி., ஆஷிஸ் புனியா பேசுகையில், கற்க கசடற என்னும் திருக்குறள் வாயிலாக மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு தினமும் தான் ஒரு திருக்குறள் மனப்பாடம் செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது,

மாணவர்கள் தினமும் ஒரு திருக்குறள் கற்க வேண்டும். பின்பு குறள் வழி நடக்க வேண்டும். யு.பி.எஸ்.சி., தேர்வில் திருக்குறள் சம்பந்தமான கேள்விகள் அதிகம் கேட்கப்படுகிறது. கல்லூரி காலங்களில் நம்மை சுற்றி உள்ளவர்கள் பல நல்ல அறிவுரையும், குறுக்கு வழி செல்ல அறிவுரையும் வழங்குவார்கள். நல்ல வழியை மாணவர்கள் தேர்வு செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்றார்.

Advertisement