கல்லுாரியில் தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி

கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., மற்றும் ஏர்வாடி தீயணைப்பு துறை சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.

முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். துணை முதல்வர் பெரோஸ்கான் முன்னிலை வகித்தார். தீயணைப்புத்துறை தலைமை அலுவலர் அருள்ராஜ் மற்றும் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். முதல் உதவியின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது

இதில் அனைத்துத் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் சுலைமான், சதாம் உசேன், முனிய சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

---

Advertisement