ரூ 4.10 கோடியில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டடம் திறப்பு
தேவிபட்டினம்: பனைக்குளம், சித்தார்கோட்டை, தேவிபட்டினம், அரசூர், நகரிக்காத்தான் பகுதியில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை அமைச்சர் ராஜிவ் திறந்து வைத்தார்.
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளத்தில் ரூ.1.80 கோடியில் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம், ரூ.1.10 கோடியில் சித்தார் கோட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம், தேவிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.60 லட்சத்தில் கூடுதல் கட்டடம், திருவாடானை வட்டம் அரசூரில் ரூ.30 லட்சத்தில் துணை சுகாதார நிலைய புதிய கட்டடம், நகரிகாத்தான் துணை சுகாதார நிலையத்திற்கு ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம் ஆகியவற்றை நேற்று அமைச்சர் ராஜிவ் திறந்து வைத்தார்.
கலெக்டர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் கலெக்டர் திவ்யான் ஷீ நிகம், மாவட்ட சுகாதார அலுவலர் அர்ஜுன் குமார், மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் நடராஜன், தலைமை மருத்துவ அலுவலர் ரமேஷ் பாபு, வட்டார மருத்துவ அலுவலர்கள் ஜென்னத் யாஸ்மின், மகேஸ்வரி, வைதேகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
இந்திய அணிக்கு வெண்கலம் * ஆசிய யூத் டேபிள் டென்னிசில்
-
காலிறுதியில் இந்திய ஜோடி * யு.எஸ்., ஸ்மாஷ் டேபிள் டென்னிசில்
-
சர்வதேச இந்திய கைப்பந்து போட்டிக்கு விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
-
அன்னாபிஷேகம்
-
உவ்வே... கழிப்பறைகளுக்கு அபராதம்: கமிஷனர் உத்தரவு
-
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம்