பிரேசில் 'திரில்' வெற்றி: ஜப்பான் அணி ஏமாற்றம்
ஹூஸ்டன்: உலக கோப்பை கால்பந்து 'ரவுண்டு-32' போட்டியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் கேப்ரியல் மார்டினெல்லி ஒரு கோல் அடித்து கைகொடுக்க பிரேசில் அணி 2-1 என, 'திரில்' வெற்றி பெற்றது. ஜப்பான் அணி பரிதாபமாக வெளியேறியது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடருக்கான 'ரவுண்டு-32' போட்டியில், உலகின் 'நம்பர்-5' பிரேசில் அணி, 17வது இடத்தில் உள்ள ஜப்பான் அணியை எதிர்கொண்டது. பிரேசில் வீரர் நெய்மர் களமிறங்கவில்லை.
ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஜப்பான் அணிக்கு கைஷு சானோ ஒரு கோல் அடித்தார். பின், 35 நிமிடத்தில் பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர் 'பாஸ்' செய்த பந்தில் சகவீரர் லுாகாஸ் பாகுயட்டா கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் ஜப்பான் அணியினர் பந்தை தடுத்தனர். பிரேசில் அணியினர் நீண்ட நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த போதும் கோல் அடிக்க முடியாமல் தடுமாறினர். முதல் பாதி முடிவில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 56வது நிமிடத்தில் கேப்ரியல் துாக்கி அடித்த பந்தை பிரேசிலின் கேஸ்மிரோ தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். பின், 58வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் அடித்த பந்தை ஜப்பான் கோல்கீப்பர் ஜியான் சுசூகி தடுக்க முயன்றார். ஆனால் பந்து அவரது கையில் பட்டுச்சென்று 'கோல்போஸ்டில்' மோதியதால், வினிசியசின் கோல் வாய்ப்பு நழுவியது.
'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+2வது நிமிடம்) காயமடைந்த கேஸ்மிரோ வெளியேறினார். பின், 90+5வது நிமிடத்தில் புருனோ குய்மரேஸ் 'பாஸ்' செய்த பந்தில் பிரேசிலின் கேப்ரியல் மார்டினெல்லி ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 'ரவுண்டு-16' போட்டிக்கு முன்னேறியது. இதில் (ஜூலை 5), ஐவரி கோஸ்ட் அல்லது நார்வே அணியை சந்திக்கும்.
குவிந்த ரசிகர்கள்
பிரேசில், ஜப்பான் அணிகள் மோதிய 'ரவுண்டு-32' போட்டியை காண, ஹூஸ்டன் மைதானத்திற்கு 68,777 பேர் வந்தனர்.
மேலும்
-
அமோனியா வாயு கசிவு விவகாரம்: 68 பேர் அசாமிற்கு அனுப்பி வைப்பு
-
முருகன் கோவிலுக்கு மாற்று மலைப்பாதை பணிகள் காலதாமதம்! வனத்துறை அனுமதிக்காக பல மாதங்களாக காத்திருப்பு
-
கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு; அபராதம், பறிமுதல் தொடர இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
-
ஏரி குடிமராமத்து திட்டத்தில் செய்ய முடியாத 74 பணிகளுக்கு செலவிடப்பட்ட நிதியை திரும்ப செலுத்த உத்தரவு
-
செய்த வேலைக்கு பணம் கிடைக்காமல் ஒப்பந்ததாரர்கள் திண்டாட்டம்! அரசியல்வாதிகள் வாய்மொழி உத்தரவை நம்பியதால் சிக்கல்
-
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா: சட்டசபை செயலர் ஐகோர்ட்டில் பதில்