ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள் பாரபட்சமின்றி நடக்க முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை: 'தமிழகத்தில் போதை கலாசாரத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்தும் பணியில் அரசியல் கூடாது. த.வெ.க.,வினராக இருந்தாலும், எவ்வித தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, முதல்வர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று தொடங்கியது. காலை 9:30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் மாநாடு தொடங்கியது; மதியம் 1:45 மணி வரை நடந்தது.
அமைச்சர்கள், கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள் மட்டுமே பங்கேற்ற மாநாட்டில், முதல்வர் விஜய் பேசியுள்ளதாவது: வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச, லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசை தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என மக்கள் முடிவு செய்து, த.வெ.க., அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னையை பொறுத்தவரை, அதிகாரிகள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனை பெற்று தர வேண்டும். அதில், நிரபராதிகள் யாரும் தப்பி தவறிக்கூட பாதிக்கப்பட்டு விடக்கூடாது.
கலெக்டர்கள் ஒவ்வொரு மாதமும் சட்டம் - ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு முக்கியமான வழக்கிலும் சட்ட வல்லுனர்களோடு கலந்தாலோசித்து, தவறு செய்தவர்கள் தப்பி விடாத வகையில் உடனடியாக தீர்வு காண, சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
முக்கியமாக பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். இதில், எந்த மாற்றத்தையும், சமரசத்தையும் செய்யக்கூடாது. பெண்கள் பாதுகாப்பிற்கு உரிய சிறப்பு ஏற்பாடுகளை செய்தே ஆக வேண்டும். இதில், கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள் துல்லியமான சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கு அருகே உள்ள கடைகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்; தேவைப்படும்பட்சத்தில், அங்கு சோதனை நடத்த வேண்டும்.
போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனை வாங்கி தருவதை உறுதி செய்ய வேண்டும். ஜாதி வேறுபாடுகளை தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்குகிற போது தான், கல்வி கொண்டாட்டமாக இருக்கும்.
அதை கண்காணிப்பதும் அதிகாரிகளின் கைகளில் தான் உள்ளது. வெளிப்படைத்தன்மையே அரசின் முதன்மை நோக்கம். எனவே, கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கள், அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்படலாம். தனி நபர்களின் தலையீடு இருக்காது.
கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும்; வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்; மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
@block_P@
* ரேஷன் கடைகளில் எடை குறைபாடு இல்லாமல், தரமான உணவு பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்
* அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், மின் வினியோகம், முதியோர் ஓய்வூதியம், சான்றி தழ்கள் வழங்குவதில் விரைவான செயல்பாடுகள் வேண்டும்
* மக்கள் மனுக்களை கொண்டு வரும் போது, இது சாத்தியம் அல்லது சாத்தியம் இல்லையென்றால், சரியான காரணங்களுடன் அவர்களுக்கு தெளிவுபட சொன்னாலே புரிந்து கொள்வர்
* அரசின் சேவைகள் மக்களின் வீட்டுக்கே போய் சேர வேண்டும். அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வரும் போது, அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
* ஜாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் ஜாதி ஊக்குவிப்பு சம்பவங்களை கண்காணிக்க வேண்டும்
* கோவில் திருவிழாக்கள், அரசியல் பேரணிகள், பொது நிகழ்வுகளின் போது நெரிசல் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும்.block_P
@block_Y@
மதிய உணவு இடைவேளைக்கு பின், 2:30 மணிக்கு கலெக்டர்கள், துறை செயலர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாநாடு துவங்கியது. இதில், நகராட்சி நிர்வாகம், பொதுப்பணி, எரிசக்தி உள்ளிட்ட 23 தலைப்புகளில் துறை செயலர்கள் பேசினர்.
திட்டங்கள் செயலாக்கம், மாவட்டங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து எடுத்து கூறினர். அதற்கு கலெக்டர்கள் விளக்கம் அளித்தனர். கூட்டம் இரவு 7:00 மணி வரை நீடித்த நிலையில், 17 தலைப்புகளில் மட்டும் விவாதம் நடத்த முடிந்தது.
இதை தொடர்ந்து, இன்று காலை எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு, அதை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடக்கிறது.
பிற்பகலில் மீண்டும் கலெக்டர்கள், துறை செயலர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, மீதமுள்ள ஆறு தலைப்புகளில் விவாதம் நடக்க உள்ளது.
அதன்பின், முதல்வர் விஜய் நிறைவு உரையாற்றி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்.block_Y
@block_B@
கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தன் பட்டினப்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், காலை 8:50 மணிக்கு தலைமை செயலகம் வந்தார். தன் சேம்பரில் சிறிது நேரம் அமர்ந்திருந்த விஜய், ராகு காலம் முடிந்தவுடன், 9:00 மணிக்கு பின், கூட்ட அரங்குக்கு சென்றார்.
தலைமை செயலக கட்டடத்தின் வெளிபக்கமாக செல்வதை தவிர்த்தார். கோட்டை பாரம்பரிய கட்டடம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தை இணைக்க கட்டப்பட்டுள்ள, 'ரேம்ப்' வாயிலாக அங்கு முதல்வர் சென்றடைந்தார்.
பெரும்பாலான கலெக்டர்கள், முதல்வர் விஜயை போலவே, 'கோட், ஷூட்' அணிந்து வந்திருந்தனர். சில போலீஸ் அதிகாரிகளும் கோட் அணிந்து பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, ஐ.டி.சி., சோழா நட்சத்திர ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்டு, காலை டிபன், மதிய உணவு, தேநீர், காபி, 'ஸ்நாக்ஸ்'கள் வழங்கப்பட்டன.block_B
@block_G@
பெண்களுக்கு பாதுகாப்பற்ற பகுதிகள், குற்றம் அதிகமான இடங்கள், விபத்து அதிகமாக நிகழும் பாதைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகமாக வரும் இடங்கள் என, அனைத்து பகுதிகளிலும், 'சிசிடிவி கேமரா' நிறுவ வேண்டும். பெண்கள் பாதுகாப்பு குறித்து, மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த கூட்டத்தை நடத்த வேண்டும்.
போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி., - டி.ஐ.ஜி., - எஸ்.பி.,க்கள் ஆய்வின்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களின் புள்ளிவிபரங்கள் மட்டுமல்லாமல், விசாரணையின் தரம், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களை சார்ந்தோருக்கான இழப்பீடு மற்றும் நிலுவை வழக்குகளின் நிலை போன்றவற்றை மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 'போக்சோ' வழக்குகளில் எப்.ஐ.ஆர்., பதிவில் தாமதம் ஏற்படக்கூடாது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், புகார்களை மறைக்கவோ, தாமதமாக அனுப்பவோ கூடாது.
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும். மாநிலத்தில் சில பகுதிகளில் குழந்தை திருமணங்கள் தொடர்ந்து அதிகளவில் பதிவாகின்றன. அதை மாற்றும் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.
சிறார் குற்றங்களில் கும்பல் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்களில் ஈடுபடும் போக்கு அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டும். மாணவர் இடைநிற்றலை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும். block_G
@block_P@
மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகளில், உள்ளாட்சி அமைப்புகளை தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும். போதைப்பொருள் அச்சுறுத்தலை, செயலாக்கத்தால் மட்டுமே தீர்க்க முடியாது.
போதை மருந்துகளாக சில மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்து ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், போதை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற எல்லையோர மாவட்டங்கள் வழியாக போதைப்பொருட்கள் மற்றும் கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
சென்னை, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே கஞ்சா, குட்கா, பிற போதைப் பொருட்களின் பரவலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். block_P
மேலும்
-
பிரேசில் 'திரில்' வெற்றி: ஜப்பான் அணி ஏமாற்றம்
-
மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட குழு: அரசு உத்தரவு
-
ஹிந்து எதிர்ப்பு அரசியலை கைவிடலாமா? திமுக தலைமை திடீர் ஆலோசனை
-
'முதலில் அடிப்படை வசதி; பின், கட்டண உயர்வு'
-
போதை இளைஞர் கைது
-
குமுளி மலைப்பாதையில் லாரி பழுது 10 நாட்களாக அகற்றாததால் நெரிசல்