மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட குழு: அரசு உத்தரவு
சென்னை: தமிழக பள்ளிக்கல்வியில், புதிய பாடத்திட்டம் உருவாக்குவதற்காக, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில், புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின், 'தேசிய கல்வி கொள்கை - 2020'க்கு மாற்றாக, தமிழக அரசு கடந்த ஆண்டு, மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டது.
'அதன் அடிப்படையில், பள்ளி மாணவர்களுக்கான, புதிய பாடத்திட்டங்களை வடிவமைக்க, இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில், அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தலைமையில், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில், பாடத்திட்ட வடிவமைப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை, தமிழக அரசு ரத்து செய்து, 'மாநில பாடத்திட்டம் மற்றும் பாடநுால் உருவாக்கம்' என்ற புதிய குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
குழுவின் தலைவராக, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக, ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., எனும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி வெங்கடேஷ்வரன், சென்னை பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான் உட்பட 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில ஆசிரியர் கல்வியி யல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர், உறுப்பினர் செயலராகவும், பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வித்துறை, தனியார் பள்ளிகள் இயக்ககம் மற்றும் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குந ர்கள் ஆகியோர், உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.
Hmm kind of ego ...nothing else ...just draw the centre policy to join nation education system to establish the government schools rest all waste of time
காலம் கடந்த முதலமைச்சர் லியோனிய போட்டதுக்கு இது பரவாயில்லதான்
சும்மாவே இவர் சொறியனை புகழ்ந்து பாடி ஆடுவார், இப்போது காலில் சலங்கை வேறு கட்டிவிட்டார்கள்.
Thanks for considering the space guy for this post. But Chief Minister must consider the people from the modern engineering industries that employ la trends in the design tools, manufacturing and maintenance etc.,
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழ் சமூகம் விஞ்ஞானத்திலும் பொறியியிலும் வணிகத்திலும் மிகச் சிறந்த முன்னோடிகள் அதன் அடிப்படையில் பாடத்திட்டமும் தற்போது எதிர்காலத்திற்கு தேவையான விதத்தில் பாடத்திட்டமும் அமையுமாறு இந்த புதிய குழுக்கள் அமைக்கும் என்று எதிர்பார்ப்போம் கடந்த காலங்களில் ஏதோ அந்த திராவிடர்கள் வந்து தான் தமிழ்நாட்டை உயர்த்தியது போல் முழுக்க முழுக்க திராவிட புராணம் இருந்தது இந்த திராவிட புராணம் தமிழ்நாட்டை நமது முன்னோர்களின் விஞ்ஞானத்தையும் வணிகத்தையும் பொறியியலையும் அ இருட்டடிப்பு செய்வது தான் மிச்சம் எனவே தற்போதைய குழு மிகச் சிறந்த பாடத்திட்டத்தை நமது எதிர்கால சந்ததிக்கு உருவாக்கும் என்று எதிர்பார்ப்போம் வாழ்த்துக்கள்
மயில்சாமியை போட்டது ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவே. மற்றபடி விஜய் அரசு திமுகவின் 2.0 என்பது போகப்போக புரியும்.
அவரும் பெரியார்தான் எனக்கு கல்வி கொடுத்தார் ரப்பர் செருப்பு போட கற்றுக்கொடுத்தார் என்று சொல்லி பாடத்தை ஆரம்பிப்பார்
இவர் கழகத்தின் விசுவாசி ஆயிற்றே...வெளங்கிடும்
அரசின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. திரு மயில்சாமி அண்ணாதுரை நாம் அனைவரும் அறிந்த சிறந்த விஞ்ஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவருக்கு எதிர்காலத்து விஞ்ஞான வளர்ச்சிக்கு பொருத்தமான பாட திட்டதை வடிவமைப்பதில் சிறந்த பங்காற்றுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேநேரத்தில் உயர்கல்வித்துறையில் சிறந்த பங்காற்றியவர்களை கொண்டு இக்குழுவை அமைத்தால் மேலும் பொருத்தமாக இருக்கும். பாடத்திட்டங்களை வடிவமைப்பதில் அவர்களுக்கு இதைவிட சிறந்த அனுபவமும் திறமையும் இருக்கும். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் திரு பாலகுருசாமி போன்றவர்கள் பாட திட்டத்தை வடிவமைக்கும் இந்த பணிக்கு மேலும் பொருத்தமாக இருப்பார்கள்.
சிறந்த? எந்த விதத்தில். விவரித்தார் புரிந்து கொள்வோம்
டெட்ரா: உங்களுக்கு இன்னும் அறிவு தேவை. முதலில் பொது அறிவை வளர்த்துக்கொண்டு மீண்டும்வந்து இந்த யெய்திகளை படிக்கவும்.
திராவிட குப்பைகளை அறவே புறந்தள்ளி மாணவர்கள் தமிழக எதிர் காலத்தில் சிறப்புற கல்வி திட்டம் அமைய வேண்டும். வாழ்த்துகள்
நல்ல முடிவு.
கால வரையரை நிர்ணயம் செய்து புதிய பாட திட்டம் விஞ்ஞானம் ஆராய்ச்சி கல்வி இவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு மாணவர்கள் விரும்பும் வகையில் அமைக்க சுதந்திரமாக செயல்பட ஏற்பாடு செய்யுங்கள்