கிறிஸ்தவர்களின் எதிர்ப்பால் கோவில் புனரமைப்பு பாதிப்பு தீர்வு கோரி டி.ஆர்.ஓ.,விடம் மனு

ஈரோடு; சமூக நீதி எழுச்சி கழக நிறுவன தலைவர் சசி-குமார், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம் வழங்-கிய மனுவில் கூறியிருப்பதாவது: மொடக்குறிச்சி தாலுகா நெறிப்பாறையில், 130 குடும்பங்கள் வசிக்கின்றன.


இவர்கள் இந்து அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த-வர்கள். இவர்கள் குல வழக்கப்படி மாயவர் கோவில் சுயம்பு வடிவில் அமைத்து, காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர். கோவிலை புனரமைப்பு செய்ய முடிவு செய்து, 2025 செப்.,28ல் பூஜை போட்டனர். அங்குள்ள சில கிறிஸ்தவ குடும்பத்தினர், கோவில் புனரமைப்பு கட்டுமானம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை எழும் வகையில் எதிர்ப்பு தெரிவிப்-பதால் கட்டுமானம் பாதித்தது. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மாயவர் கோவில் புனர-மைக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement