அந்தியூரில் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆக.,31ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு

அந்தியூர்; அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபி-ஷேகம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, 52 லட்சம் ரூபாய் செலவில், ஐந்து மாதங்களாக புனரமைப்பு பணி நடந்து வருகிறது.


இதனால் ஆண்டுதோறும் ஏப்., மாதம் நடக்கும் குண்டம் திருவிழா நடப்பாண்டு ரத்து செய்யப்-பட்டது. 95 சதவீத பணி நிறைவடைந்ததால், கும்-பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. செயல் அலுவலர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். அந்தியூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஹரிபாஸ்கர் கலந்து கொண்டார். கோவில் நிர்வாகம், மிராசுதாரர்க-ளிடம் ஆலோசனை நடத்தினார். இதில் ஆகஸ்ட், 31ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்-யப்பட்டது.கூட்டத்தில் த.வெ.க., கிழக்கு மாவட்ட செய-லாளர் விஜய் வெங்கடேஷ், துர்க்கை வழிபாட்டு குழு தேவி, நிர்மலா, செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement