டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடு நீக்கம்: பெட்ரோலிய அமைச்சகம் அறிவிப்பு

1

சென்னை: 'டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடுகள், நாளை முதல் விலக்கிக் கொள்ளப் படுகின்றன' என, பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடுகளில், கடந்த மார்ச்சில் ஏற்பட்ட போரால், பல நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. நம் நாட்டில் தட்டுப்பாடு நிலையிலும், சிலர் பீதி காரணமாக, பெட்ரோல், டீசலை அதிகளவில் வாங்கி பதுக்கினர்.

எனவே, 'பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்குகளில், ஒரு வாடிக்கையாளர், ஒரு வாகனத்திற்கு, ஒரு நாளில், 200 லிட்டர் டீசலுக்கு மேல் வழங்கக் கூடாது' போன்ற கட்டுபாடுகளை, இம்மாதம் 12ல் பெட்ரோலிய அமைச்சகம் விதித்தது. இந்த கட்டுப்பாடுகள், நாளை முதல் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.

இது குறித்து, எண்ணெய் நிறுவனங்களுக்கு, பெட்ரோலிய அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், 'தற்போது நாட்டில் நிலவும், பெட்ரோலிய பொருட்களின் வினியோக நிலையை ஆய்வு செய்த மத்திய அரசு, கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்துவது, இனி பொது நலனுக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துஉள்ளது. 'எனவே, இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் திரும்ப பெறப்படுகிறது' என, தெரிவித்துள்ளது.

Advertisement