தர்மஸ்தலாவில் பா.ஜ., -  எம்.எல்.ஏ., சத்தியம்

- நமது நிருபர் -

மேல்சபை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போடவில்லை என பா.ஜ.,- எம்.எல்.ஏ., - ஹெச்.கே.சுரேஷ், தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவிலில் சத்தியம் செய்தார்.

கர்நாடகாவில் கடந்த மாதம் நடந்த மேல்சபை தேர்தலில் பா.ஜ., மற்றும் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். இதனால், காங்கிரசின் ஐந்தாவது வேட்பாளரும், எம்.எல்.சி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.

இதில், ஹாசன் மாவட்டம், பேலுார் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹெச்.கே.சுரேஷ் காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஹெச்.கே.சுரேஷ் தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவிலுக்கு தன் ஆதரவாளர்களுடன் நேற்றுசென்றார்.

மஞ்சுநாதேஸ்வரரை தரிசித்தார். அப்போது, மேல்சபை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போடவில்லை என சத்தியம் செய்தார்.

இதையடுத்து, அவர் அளித்த பேட்டி:

நான் கட்சிக்கு எதிராக ஓட்டு போடவில்லை. கட்சிக்கு துரோகமும் செய்யவில்லை. விஜயேந்திரா மற்றும் அசோக் பரிந்துரைத்த வேட்பாளருக்கே ஓட்டு போட்டேன். இதற்கு, மஞ்சு நாதேஸ்வரரே சாட்சி.

அரசியலில் என்னுடைய வளர்ச்சி சிலருக்கு பிடிக்கவில்லை.

இதனால், எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் வேண்டுமென வதந்திகள் பரப்பப்படுகின்றன.

ஹிந்துத்துவாவில் நம்பிக்கை கொண்டவன் நான். பா.ஜ.,வின் மீதான விசுவாசம் எனக்கு அதிகம். கட்சி நலனே எனக்கு முதன்மையானது. கடவுள் அருளால் எனக்கு பொதுமான அளவு பணம் இருக்கிறது . எனவே, கட்சி மாறி ஓட்டு போட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement