கர்நாடக பா.ஜ., குழப்பம் விரைவில் தீரும்: சுரேஷ் கவுடா நம்பிக்கை
பெங்களூரு: ''கட்சியில் நிலவும் குழப்பத்திற்கு, இரண்டு மாதத்தில் தீர்வு கிடைக்கும்,'' என, துமகூரு ரூரல் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை. ஆடியோவில் இருப்பது எனது குரல் இல்லை என, முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா விளக்கம் அளித்துள்ளார். இதற்கு பிறகும் இந்த விஷயத்தை பற்றி பேசுவது சரியாக இருக்காது.
கர்நாடக பா.ஜ.,வில் குழப்பம் நிலவுவது உண்மை தான். இதற்கு இரண்டு மாதங்களில் தீர்வு கிடைக்கும். அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும் திறன், எங்கள் கட்சி மேலிட தலைவர்களுக்கு உள்ளது.
வரும், 2028 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராவோம் என்று சிவகுமார் பகல் கனவு காண்கிறார். மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவர். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி, 175 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தவெக ஆட்சியை கவிழ்க்க 40 நாட்களாக முயற்சி: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
-
அரசு பஸ்கள் 'டிரிப் கட்': மலைப்பகுதி மக்கள் அவதி
-
துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி; கட்சிக் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு
-
தீ தடுப்பு மீட்பு பயிற்சி
-
ஒப்பந்தம் பெற பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்; அமைச்சர் ஆதவ் அறிவிப்பு
-
ஐரோப்பாவில் கோர தாண்டவமாடும் வெப்பஅலை; ஸ்பெயின், பிரான்சில் 2000 பேர் பலி